25.7 C
Jaffna
January 11, 2025
Pagetamil
சினிமா

ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ முதல் சிங்கிள்

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் முதல் சிங்கிள் ‘ஜரகண்டி’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஷங்கர், ராம் சரண் ஹீரோவாக நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தை இயக்கி வருகிறார். இதில் கியாரா அத்வானி நாயகி. அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, நவீன் சந்திரா, ஜெயராம், சுனில் உட்பட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு, மெகா பட்ஜெட்டில் தயாரிக்கிறார். தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஜரகண்டி’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று வெளியாகியுள்ளது.

‘அந்நியன்’ படத்தில் இடம்பெற்ற ‘ரண்டக்க ரண்டக்க’ பாடல் போல ஒரு பாடல் வேண்டும் என்று ஷங்கர் தமனிடம் கேட்டிருக்கலாம். அதே வைப்-ல் ஒரு பாடலை உருவாக்கித் தந்துள்ளார் தமன்.

ஷங்கர் படங்களுக்கே உரிய பிரம்மாண்ட கலர்புல் செட் பின்னணியில், நூற்றுக்கணக்கான குரூப் டான்சர்கள் சூழ பாடல் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடல் காட்சிகளுக்காக மட்டும் ரூ.90 கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. அதற்கான நியாயத்தை, இந்த வீடியோவின் வழியே தெரிந்து கொள்ளமுடிகிறது.

டலேர் மெஹந்தி மற்றும் பூஜா வெங்கட் குரலில் உருவாகியுள்ள இந்த பாடல் கேட்டதுமே மனதில் ஒட்டிக் கொள்ளும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது. விவேக்கின் தமிழ் வரிகள் பெரிதாக ஒட்டவில்லை.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘த கோட்’ படத்தால் மன அழுத்தம்: நடிகை மீனாட்சி சவுத்ரி வருத்தம்

Pagetamil

நடிகை ஹனி ரோஸ் புகார் – கேரள தொழிலதிபர் கைது

Pagetamil

கார் பந்தய பயிற்சியின் போது விபத்தில் சிக்கிய அஜித்

Pagetamil

வாழ்க்கையை சீரழித்து விட்டார்: இயக்குனர் மீது நடிகை புகார்

Pagetamil

“நான் சினிமாவுக்குள் வந்ததே சிலருக்கு பிடிக்கவில்லை” – சிவகார்த்திகேயன்

Pagetamil

Leave a Comment