நடப்பு ஐபிஎல் சீசனின் 7வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 63 ரன்களில் வீழ்த்தியுள்ளது ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
சென்னை – சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ரொஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. சென்னை அணி முதலில் துடப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது. ரச்சின் ரவீந்திரா 20 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கப்டன் ருதுராஜ் 46 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
ஷிவம் துபே, 23 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். 6 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து அசத்தினார் சமீர் ரிஸ்வி. மிட்செல் 24 ரன்கள் எடுத்து இறுதிவரை களத்தில் இருந்தார். குஜராத் அணி சார்பில் ரஷித் 2 விக்கெட் கைப்பற்றி இருந்தார். சாய் கிஷோர், ஸ்பென்சர் ஜோன்சன், மோகித் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை குஜராத் விரட்டியது. கப்டன் கில் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு சீரான இடைவெளியில் குஜராத் அணி பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்தனர். சாஹா, விஜய் ஷங்கர், மில்லர், சாய் சுதர்ஷன், ஓமர்ஸாய், ரஷித், தெவாட்டியா ஆகியோர் ஆட்டமிழந்தனர். இதில் அதிகபட்சமாக சாய் சுதர்ஷன் 37 ரன்கள் எடுத்திருந்தார்.
20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது. அதன் மூலம் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. நடப்பு சீசனில் 2 போட்டிகளில் விளையாடி அந்த இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது சிஎஸ்கே. தீபக் சஹர், முஸ்தபிசுர் ரஹ்மான், துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்களை இந்தப் போட்டியில் கைப்பற்றி இருந்தனர். மிட்செல் மற்றும் பத்திரன தலா ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தனர். ஷிவம் துபே ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் 7.3-வது ஓவரில் மிட்செல் வீசிய ஓவரில் ஆட்டமிழந்தார் விஜய் ஷங்கர். மிட்செல் வீசிய பந்து எட்ஜ் ஆக விக்கெட் கீப்பர் பணியை கவனித்த தோனி, தனது வலது பக்கம் சுமார் 2 மீட்டர் தூரம் டைவ் அடித்து பந்தை பிடித்து அசத்தி இருந்தார். அப்போது சேப்பாக்கம் மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்கள் உற்சாக ஒலி எழுப்பி இருந்தனர்.
𝗩𝗶𝗻𝘁𝗮𝗴𝗲 𝗠𝗦𝗗 😎
An excellent diving grab behind the stumps and the home crowd erupts in joy💛
Head to @JioCinema and @StarSportsIndia to watch the match LIVE#TATAIPL | #CSKvGT pic.twitter.com/n5AlXAw9Zg
— IndianPremierLeague (@IPL) March 26, 2024
நடந்து முடிந்த இரண்டு போட்டிகளிலும் தோனி பேட் செய்யவில்லை. இருந்தும் விக்கெட் கீப்பிங் பணி சார்ந்த அவரது செயல்பாடு அபாரமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.