25.7 C
Jaffna
January 11, 2025
Pagetamil
உலகம்

நாயகியின் உயிரைக் காத்த காதல் சின்னம்!: 21 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ‘டைட்டானிக்’ மரக்கதவு

பிரபல இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 1997ஆம் ஆண்டு வெளியாகி, உலகெங்கிலும் உள்ள சினிமா ரசிகர்களைக் காதல் கடலில் மூழ்கடித்த திரைப்படம் ‘டைட்டானிக்’.

ஒஸ்கர் விருதுக்கு 14 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட இத்திரைப்படம் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த இசை உட்பட மொத்தம் 11 ஒஸ்கர் விருதுகளைத் தட்டிச் சென்றுள்ளது. 1912ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் திகதி தனது முதல் பயணத்தை ஆயிரம் கணக்கான பயணிகளோடு தொடங்கியது டைட்டானிக். பயணத்தை ஆரம்பித்த சில தினங்களிலேயே வட அட்லாண்டிக்கில் பனிப் பாறையில் மோதி கடலில் மூழ்கியது. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர்.

இந்தச் சோகமான சம்பவத்தை மையப்படுத்தி, கப்பலில் ஒரு காதல் கதை இருந்தால் எப்படியிருக்கும் என்பதாக ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் ‘டைட்டானிக்’ படத்தை இயக்கியிருந்தார். இந்நிலையில் இப்படத்தில் ‘டைட்டானிக்’ கப்பலிலிருந்த மரக்கதவு ஏலம் விடப்பட்டிருக்கிறது. படத்தின் க்ளைமாக்ஸில் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோவும், நடிகை கேட் வின்ஸ்லெட்டும் இந்த மரக்கதவைப் பிடித்தபடி மிதந்தவாறு இருப்பார்கள். இந்தக் கதவுதான் நாயகியின் உயிரைக் காக்கும்.

அந்த மரக்கதவை 718,750 டொலருக்கு ஒருவர் ஏலம் எடுத்திருக்கிறார். அதாவது இலங்கை மதிப்புப்படி கிட்டத்தட்ட 21,75,99,334 கோடிக்கு அந்த ‘டைட்டானிக்’ கப்பலிலிருந்த மரக்கதவை வாங்கி இருக்கிறார்.

அதுமட்டுமின்றி இந்த ஏலத்தில் 1980இல் வெளியான ‘தி ஷைனிங்’ படத்தில் ஜாக் நிக்கல்சன் பயன்படுத்திய கோடாரி, 1984இல் வெளியான ‘இண்டியானா ஜோன்ஸ் அண்டு தி டெம்பிள் ஒஃப் டூம்’ படத்தில் பயன்படுத்தப்பட்ட சாட்டை உள்ளிட்ட பொருள்களும் ஏலத்தில் விடப்பட்டிருக்கின்றன. அதில் ‘டைட்டானிக்’ மரக்கதவு அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

போப் ஆண்டவர் உடல் நலக்குறைவு: உரையை வாசித்த உதவியாளர்

east tamil

ஜெட் ப்ளூ விமானத்தில் அதிர்ச்சி – இரு சடலங்கள் மீட்பு

east tamil

உலக அரசியலில் எலான் மஸ்க்கின் சர்ச்சை

east tamil

சீனாவில் 5.3 ரிச்டர் நிலநடுக்கம்

east tamil

கலிபோர்னியாவில் காட்டுத்தீ – மக்கள் வெளியேற்றம்

east tamil

Leave a Comment