கனேமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
கோனஹேன பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (20) கணேமுல்ல சுமேத மாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றை சுற்றிவளைத்து சோதனையிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அப்போது, சந்தேக நபர் விஷேட அதிரடிப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே பரஸ்பர துப்பாக்கசூடு இடம்பெற்றுள்ளது.
இதன்போது சந்தேக நபர் மற்றும் விசேட அதிரடிப்படை யை சேர்ந்த ஒருவரும் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சந்தேகநபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் கடந்த 9ஆம் திகதி ஜா-எல, தன்டுகம பஸ்வத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர் 28 வயதான எஹெலியகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் அவர் இராணுவ சேவையிலிருந்து தப்பி வந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கணேமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.