தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க, பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவிலிருந்து (COPE) இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ரோஹித அபேகுணவர்தன் தலைமையில் கோப் கூட்டங்களில் பங்குகொள்வது அர்த்தமற்றது என அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தற்போதைய கோப் தலைவர் மீது மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் அதனால் கோப் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்ததாகவும் அனுர தெரிவித்தார்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க, வசந்த யாப்பா பண்ாரா ஆகியோரும் கோப் குழுவில் இருந்து விலகியுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1