தனது காதலனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று, போதைப்பொருள் விநியோகித்த யுவதியொருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது காதலன் தப்பியோடியதாகவும் மாதம்பை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விலத்வவ பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய யுவதி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைதான யுவதி தனது காதலனுடன் இணைந்து போதைப்பொருள் விநியோகத்தில் சில காலமாக ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி, தும்மலசூரிய விலத்தாவ வீதியில் இளைஞன் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற சந்தேகத்திற்கிடமான யுவதியை பொலிஸ் குழு கைது செய்துள்ளது.
மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிடுவதற்கு பொலிஸார் முயன்றபோது, மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற இளைஞன், காதலியை கைவிட்டு, பொலிஸாரிடம் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
பொலிசார் யுவதியை சோதனையிட்டபோது, அவரிடம் ஹெரோயின் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட யுவதி மாதம்பை பொலிஸாருக்கு அழைத்து வரப்பட்டு, அவரிடம் விசாரணை நடத்திய போது, பொலிஸாரைத் தவிர்த்து சென்றது தனது காதலன் எனவும், அவரும் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும், போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டவர் எனவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
யுவதியின் தாயார் சில காலங்களுக்கு முன்னர் இவர்களை விட்டு பிரிந்து வேறு ஒரு திருமணம் செய்து கொண்டு தற்போது வேலைக்காக வெளியூர் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிசார் தடுப்புக் காவலில் வைத்து அந்த இளம் பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றனர்.
மாதம்பே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.