24.8 C
Jaffna
January 26, 2025
Pagetamil
இலங்கை

இரு நாட்டு மீனவர்களையும் மோத விடும் அரச சூழ்ச்சிய கடல் காவலர் படையணி: மீனவர்களுக்கு எச்சரிக்கை!

இந்திய இழுவைமடிப் படகு தொடர்பான பிரச்சினைக்கு இந்திய அரசாங்கத்துடன் பேசி தீர்வை எட்டுவதை விட்டு கடல் காவலர்கள் எனும் பெயரில் புதிய படையணியை உருவாக்குவது கடலில் தேவையற்ற முரண்பாடுகளை ஏற்படுத்தும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

சமகால நிலைமைகள் தொடர்பாக யாழ் ஊடக அமையத்தில் நேற்று(19) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைகள் தீர்வு காணப்படவேண்டியது அவசியம். இந்தியாவின் துறைசார் அமைச்சுடன் பேசி ஈழத்து மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் தீர்வு காணப்பட வேண்டும். அதனை விடுத்து கடல் காவலர்கள் என்றும் குடியியல் தன்னார்வ படையை உருவாக்கி தமிழக மீனவர்களுடன் மோதவிடுவது ஆரோக்கியம் அல்ல. இது இரு நாட்டு மீனவர்களிடமும் முரண்பாட்டை ஏற்படுத்தும்.இலங்கை கடற்படையை நல்லவராக்கி இலங்கை மீனவர்களை கெட்டவர்களாக காட்டும் எண்ணமோ என்ற சந்தேகம் நிலவுகிறது.

இவ்வாறு நடந்தால் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான தமிழக மீனவர்களின் போராட்டம் ஈழத்தமிழர்களுக்கு எதிரானதாக திரும்பும்.

குறித்த பிரச்சினையை ஜனாதிபதியும் அமைச்சரும் பார்த்துக்கொள்ள வேண்டும். இதை கடற்றொழிலாளர்களிடம் கையளித்தால் தேவையற்ற குழப்பம் ஏற்படும்.

கடற்படை செய்யவேண்டிய வேலையை சிவில் அமைப்பிடம் வழங்கப்படுவதை நாம் விரும்பவில்லை. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவை தாக்கல் செய்த அமைச்சரவை பத்திரத்தை மீளப்பெற வேண்டும்.

குறித்த விடயத்தின் ஆழத்தை புரிந்து கடற்றொழிலாளர் சங்கங்கள் எதிர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இரவு இசை நிகழ்ச்சிகளின் கட்டுப்பாடுகள் மீதான ஆய்வு – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

east tamil

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது!

Pagetamil

மதுபோதையில் வந்த பொலிசார் பாதசாரி கடவையில் மூதாட்டியை மோதித்தள்ளினர்!

Pagetamil

புதையல் தோண்ட முயன்ற 10 சந்தேக நபர்கள் கைது

east tamil

2வது நாளாக பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரதம்

Pagetamil

Leave a Comment