சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்பாட்டுத் தலைவர் பீட்டர் ப்ரூவருக்கும் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (14) காலை கொழும்பில் இடம்பெற்றது.
சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில், தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் கடன் மறுசீரமைப்பின் முன்னேற்றம் மற்றும் இலங்கையில் மோசடி மற்றும் ஊழலை தடுப்பது தொடர்பான செயல்முறைகள் குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடினர்.
இக்கலந்துரையாடலில் சர்வதேச நாணய நிதியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பீற்றர் ப்ரூவருக்கு மேலதிகமாக, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி வதிவிடப் பிரதிநிதி சர்வத் ஜஹான், கட்சியரினா ஸ்விட்செங்கா மற்றும் மானவி அபேவிக்ரம ஆகியோரும் கலந்துகொண்டனர்.
தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய செயற்குழு உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், தேசிய செயற்குழு உறுப்பினர் முடித நாணயக்கார மற்றும் பொருளாதார சபை உறுப்பினர்களான பேராசிரியர் அனில் ஜயந்த, பேராசிரியர் சீதா பண்டார, கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, சுனில் ஹந்துன்நெத்தி ஆகியோர் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.