கனடாவுக்கு செல்வதற்கு விசா கிடைத்த பின்னர், மாற்றுத்திறனாளியெருவர் கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துள்ளார்.
யாழ்ப்பாணம், கொல்லன்கலட்டியை சேர்ந்த தனபாலசுப்பிரமணியம் சுஜீவன் (32) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரை மாய்த்த நபரின் சகோதரி ஒருவரும், சகோதரன் ஒருவரும் கனடாவில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இறந்த நபருக்கும், அவரது தாயாருக்கும் கனடாவுக்கான சுற்றுலா விசா கிடைத்துள்ளது.
கனடாவுக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்ருந்த போது, கடந்த 11ஆம் திகதி அவர் உயிரை மாய்த்துள்ளார். தனது சக்கர நாற்காலியைக் கிணற்றுக்கு அருகே நிறுத்திவிட்டு கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார்.
அவர் கனடாவுக்கு செல்வதில் தனக்கு விருப்பமில்லையென யாருக்கும் கூறியிருக்கவில்லை. எனினும், கனடா செல்வதில் ஏதேனும் அசௌகரியத்தை உணர்ந்து உயிரை மாய்த்திரக்கலாமென கருதப்படுகிறது.