நாட்டிற்கு தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் பேரில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் அனைவரினதும் பிணை விண்ணப்பத்தை உரிய வழக்கு விசாரணை செய்து முடியும் வரை நிராகரிக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த பிணை மனுக்கள் இன்று (14) நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் மற்றும் சந்தேகநபர்கள் நால்வரின் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
விசாரணை முடியும் வரை அவர்களை காவலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 28ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1