கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான ஒஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வருகிறது. இந்த 96 வது ஒஸ்கார் விருது விழாவில், WWE மல்யுத்த அரங்கில் பிரபல வீரரான ஜோன் செனா நிர்வாணமாக மேடையில் தோன்றியது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒஸ்கார் விருதுகளின் போது, சிறந்த ஆடைவடிவமைப்புக்கான விருதை அறிவித்த போதே இந்த சம்பவம் நடந்தது.
ஹாலிவுட்டின் டால்பி தியேட்டரில் நடைபெறும் வருடாந்திர அகாடமி (ஒஸ்கார்) விருதுகளின் தொகுப்பாளராக ஜிம்மி கிம்மல் செயற்பட்டார்.
சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான விருதை வழங்குவதற்கு முன், டேவிட் நிவன் எலிசபெத் டெய்லரை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்த போது, 1974 ஒஸ்கார் விருதுகளின் போது மேடையில் ஒருவர் நிர்வாணமாக ஓடியதை கிம்மல் குறிப்பிட்டார்.
“இன்று ஒரு நிர்வாண மனிதன் மேடையின் குறுக்கே ஓடுவதை உங்களால் கற்பனை செய்ய முடியுமா?” கிம்மல் கேட்டார். அப்போது நடிகர் ஜான் செனா ஆடையின்றி பக்கவாட்டு மேடையில் இருந்து மெதுவாக வெளிவருவதைக் காணமுடிந்தது.
விருதுக்குரியவரின் பெயர் பொறிக்கப்பட்ட சிறிய அட்டையால் தனது நிர்வாணத்தை மறைத்து, ஜோன் மைய அரங்கிற்குச் சென்றார்.
WTF IS JOHN CENA DOING ??!? pic.twitter.com/j098cHFBKO
— juju 💰 (@ayeejuju) March 11, 2024
“ஆடைகள்… அவை மிகவும் முக்கியம்,” என்று அவர் கூறினார்.
John Cena changes his outfit during Oscars commercial pic.twitter.com/MrmvYPNdmn
— WrestlingWorldCC (@WrestlingWCC) March 11, 2024