யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் 107 வயது முதியவர் ஒருவர் நேற்று முன்தினம் (07) காலமாகினார்.
சாவகச்சேரி உதயசூரியன் பகுதியினை சேர்ந்த பூச்சி வேலுமுத்து என்பவரே 107 வயதில் காலமாகினார்.
1917ஆம் ஆண்டு இவர் பிறந்துள்ளார். இவர் தனது 107 வயது பிறந்தநாளை அண்மையில் கொண்டாடியிருந்தார். இவருக்கு 10 பிள்ளைகள், 75 பேரப்பிள்ளைகள், 25 பூட்டப்பிள்ளைகள், 5 கொள்ளுப் பேரப் பிள்ளைகள் உள்ளனர்.
கடந்த ஒரு மாத காலமாக சுகயீனமுற்றிருந்தவர், நேற்று முன்தினம் காலமாகினார். இலங்கையில் ஆங்கிலேயர் ஆண்ட காலப்பகுதியில் இவர் பணிபுரிந்தமை குறிப்பிடத்தக்கது.
அவரது இறுதிக் கிரியைகள் நேற்று அவரது இல்லத்தில் நடைபெற்று, அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.



