பெண்களின் உரிமைகளை வலியுறுத்தி இன்று (08) ஹட்டன் நகரின் மையப்பகுதியில் பெண்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று (08) சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் ப்ரோடெக் சங்கத்தினால் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சங்கத்தின் தலைவி கருப்பையா மைதிலி, சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டாலும் இந்த நாட்டில் பெண்களுக்கு உரிய இடம் வழங்கப்படவில்லை.
பெண் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பெண் பல்வேறு வன்முறைகளுக்கு ஆளாக்கப்படுவதாகவும் கூறினார்.
இந்த நாட்டின் அரசியல் களத்தில் அதிகளவான பெண்களை பங்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஹட்டன் அலுவலகத்திற்கு முன்பாக பெண்களின் உரிமைகள் தொடர்பான வாசகங்கள் அடங்கிய பல சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டன.