வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தின் 2209 வது நாளில் நீதிக்கான மாபெரும் எழுச்சி பேரணி இன்று முல்லைத்தீவில் இடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளைத் தேடி முல்லைத்தீவு மாவட்டத்தில் எமது பௌராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் ஏழு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில்ல எமக்கான நீதி எங்கே? என கேட்கிறோம் என போராட்க்காரர்கள் தெரிவித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1