25.7 C
Jaffna
January 11, 2025
Pagetamil
சினிமா

‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ சிதம்பரம் இயக்கத்தில் தனுஷ்?

தனுஷ் நடிக்கவுள்ள 54வது படத்தை ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ சிதம்பரம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

கடந்த பிப்ரவரி 22ஆம் திகதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’. சிதம்பரம் எஸ்.பொடுவால் இயக்கியுள்ளார். சவுபின் ஷாயிர், ஸ்ரீநாத் பாஷி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளது. இதற்கு தமிழ் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பும் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

’குணா’ குகையில் நடக்கும் கதையும், இளையராஜா இசையமைத்த ‘கண்மணி அன்போடு’ பாடலும் தமிழ் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்படத்தைப் பார்த்த நடிகர் கமல்ஹாசன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விக்ரம், தனுஷ் உள்ளிட்டோர் இயக்குநர் சிதம்பரத்தை நேரில் அழைத்து பாராட்டினர்.

இந்த நிலையில், தனுஷ் நடிக்கவுள்ள 54 வது படத்தை சிதம்பரம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் – சிதம்பரம் சந்திப்பின்போதி இதுகுறித்து பேசப்பட்டது என்றும், விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

தற்போது தனுஷ் தான் இயக்கி நடிக்கும் ‘ராயன்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இன்னொரு பக்கம் தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலாவின் படத்திலும் நடித்து வருகிறார். இப்படங்களுக்குப் பிறகு இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கும் ‘தேரே இஷ்க் மெய்ன்’ என்ற படத்திலும் நடிக்க உள்ளார். இதன்மூலம் ஆனந்த் எல்.ராயுடன் மூன்றாவது முறையாக தனுஷ் கைகோக்கிறார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘த கோட்’ படத்தால் மன அழுத்தம்: நடிகை மீனாட்சி சவுத்ரி வருத்தம்

Pagetamil

நடிகை ஹனி ரோஸ் புகார் – கேரள தொழிலதிபர் கைது

Pagetamil

கார் பந்தய பயிற்சியின் போது விபத்தில் சிக்கிய அஜித்

Pagetamil

வாழ்க்கையை சீரழித்து விட்டார்: இயக்குனர் மீது நடிகை புகார்

Pagetamil

“நான் சினிமாவுக்குள் வந்ததே சிலருக்கு பிடிக்கவில்லை” – சிவகார்த்திகேயன்

Pagetamil

Leave a Comment