பதில் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய தேசபந்து தென்னகோன், பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டது சட்டவிரோதமானது என உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றில் இரண்டு அடிப்படை உரிமை மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியின் நிரோஷன் பாதுக்கவினால் ஒரு மனுவும், திருமதி சாவித்திரி குணசேகரவினால் மற்றுமொரு மனுவும் சமர்ப்பிக்கப்பட்டது.
அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள், சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்டோர் இந்த மனுக்களின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
தேசபந்து தென்னகோனை பதில் பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கு அரசியலமைப்பு சபை உத்தியோகபூர்வமாக அனுமதி வழங்கவில்லை என மனுதாரர்கள் கூறுகின்றனர்.
தென்னகோன் பொலிஸ் மா அதிபராக ஜனாதிபதியினால் அத்தகைய அனுமதியின்றி நியமிக்கப்பட்டமை முற்றிலும் சட்டத்திற்கு முரணானது என மனுதாரர்கள் கூறுகின்றனர்.
தங்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோனின் நியமனத்தை செல்லுபடியற்ற உத்தரவு பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்திடம் மேலும் கோரியுள்ளனர்.