சுழிபுரம் சவுக்கடி பிள்ளையார் கோயிலுக்கு அண்மையாக கடற்படையினர் நிறுவியிருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, நாளை திட்டமிடப்பட்ட எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
சுழிபுரம், சவுக்கடி பிள்ளையார் கோயிலுக்கு அண்மையாக உள்ள கடற்படை முகாமின் முன்பகுதியில் புத்தர் சிலையொன்று நிறுவப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் சர்ச்சையாகியிருந்தது. நாளை வெள்ளிக்கிழமை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில், புத்தர் சிலை அகற்றப்பட்டு விட்டதாகவும், எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1