வவுனியா, ஓமந்தை பகுதியில் உள்ள நீர் நிலையொன்றில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஓமந்தை, நாவற்குளத்தில் உள்ள கல்குவாரியில் காணப்படும் நீர் நிலையிலேயே இன்று (5) காலை சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
அதே பகுதியை சேர்ந்த அருணாச்சலம் சிவராசா (68) என்ற முதியவரே சடலமாக காணப்பட்டார்.
தனித்து வாழ்ந்து வந்த இந்த முதியவர், அந்த நீர் நிலையில் குளிப்பது வழக்கம். அவரது உறவினரான இளைஞன் ஒருவர் முதியவரின் வீட்டுக்கு நேற்று சென்ற போது, அவரை வீட்டில் காணவில்லை. இதையடுத்து இன்று தேடுதல் மேற்கொண்ட போது, நீர்நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1