29.6 C
Jaffna
March 4, 2025
Pagetamil
இலங்கை

கிழக்கு கல்வி நிருவாகசேவை அதிகாரிகளுக்கான இடமாற்றத்தில் அரசியல் தலையீடு: பலரும் அதிர்ச்சி!

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் இன்று வெளியிடப்பட்டுள்ள கல்வி நிருவாக சேவை அதிகாரிகளுக்கான இடமாற்றப் பட்டியல் தொடர்பில் கல்வி கிழக்கு சமூகம் அதிர்ச்சியடைந்துள்ளது.

குறித்த இடமாற்றமானது எந்தவித இடமாற்ற விதிமுறைகள்,நடைமுறைகளையும் பின்பற்றாது இடம்பெற்றுள்ளது. அதாவது இடமாற்ற விண்ணப்பம் கோரப்படவில்லை, இடமாற்ற சபை கூட்டப்பவில்லை, சங்க பிரதிநிதிகள் அதில் இடம்பெறவில்லை, வலயக்கல்வி பணிப்பாளர்களின் அனுமதியோ, ஆலோசனையோ பெறவில்லை, இடமாற்ற நியதிகள் வகுக்கப்படவில்லை போன்ற விடயங்களை கருத்தில் கொள்ளாமல் குறித்த இடமாற்றம் இடம் பெற்றுள்ளது.

மறைமுகமாக பிரதேச அரசியலை முன்னிறுத்தி பிரதேச அரசியல் அபிலாசைகளுக்கும் பிரதேச ரீதியான பழிவாங்கல்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்பட்டு மட்டக்களப்பு இராஜாங்க அமைச்சர் ஒருவரின் ஆலோசனைக்கு அமைய குறித்த இடமாற்றமானது இடம் பெற்றுள்ளதாக சந்தேகம் எழுகின்றது.

காரணம், குறித்த இடமாற்றம் பட்டியலில் 39 அதிகாரிகளின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலின் பிரகாரம் சில வலயங்களை புறந்தள்ளி சிலவலயங்களை வளப்படுத்தும் வகையிலும் செயற்பாடுகள் அமைந்துள்ளன.
அதாவது மட்டக்களப்பு, கல்வி வலயத்தில் இருந்து ஒருவர் எடுக்கப்பட்டு இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். கல்குடா கல்வி வலயத்தில் இருந்து மூன்று பேர் எடுக்கப்பட்டு நான்கு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மாகாண கல்வித் திணைக்களத்தில் இருந்து ஒருவர் எடுக்கப்பட்டு எட்டு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு கல்வி மேற்கு கல்வி வலயத்தில் இருந்து இரண்டு பேர் எடுக்கப்பட்டு நான்கு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாறாக பட்டிருப்பு கல்வி வலயத்தில் இருந்து ஆறுபேர் எடுக்கப்பட்டு மூன்றுபேர் மாத்திரம் நியமிக்கப்பட்டுள்ளனர். கல்முனை வலயத்தில் இருந்து மூன்று பேர் எடுக்கப்பட்டு ஒருவர் மாத்திரமே நியமிக்கப்பட்டுள்ளனர். அதே போன்று அக்கரைப்பற்று கல்வி வலயத்திலும் மூன்று பேர் எடுக்கப்பட்டு ஒருவர் மாத்திரம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மற்றும் பாட ரீதியாக பார்க்கின்ற போது ஒரு பாடத்துறைக்கு இரண்டு அதிகாரிகள் ஒரு வலயத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளானர். சேவை நிலையத்தில் கடமையாற்றிய ஆண்டுகள் சீராக கணக்கிடப்படவில்லை. ஒரு வருடம் கடமையாற்றியவருக்கும் இடம் மாற்றம் 8 வருடம் சேவையாற்றிய வர்களுக்கும் இடமாற்றம். இவ்வாறாக மாகாண கல்வி திணைக்களத்தை வளப்படுத்தவும் குறித்த அரசியல்வாதிகளின் பிரதேசங்களை பலப்படுத்துவது ஏனைய வலயங்களை பழிவாங்குவது போன்ற நாடகத்தை நடத்தி அரசியல் இலாபம் ஈட்டி கொடுப்பதற்கான இடமாற்றமாகவே புத்திஜீவிகள் கருதுவதுடன் இதனால் உயர்தரப் பரீட்சையில் கிழக்கு மாகாணம் பெற்றுக் கொண்ட முன்னேற்றகரமான நிலையை கீழ் நிலைக்கு கொண்டுவருவதற்கான ஒரு சதித்திட்டமாகவும் குறித்த இடமாற்றமை அமைந்துள்ளதாகவும் கருதுவதுடன் குறித்த இடமாற்றத்தை இரத்து செய்து உரிய முறைப்படி நடாத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநரை கேட்டுக் கொள்கின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தந்தை செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்கி 11 வயது மகன் பலி

Pagetamil

கொழும்பிலிருந்து நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் வந்தவர் கைது!

Pagetamil

யாழில் பெருந்தொகை கஞ்சா மீட்பு!

Pagetamil

தேடப்படும் தென்னக்கோன் இன்று சட்டத்தரணி ஊடாக சரணடையலாம்?

Pagetamil

இலஞ்சம் வாங்கிய இரு பொலிசார் கைது!

Pagetamil

Leave a Comment