26.3 C
Jaffna
January 11, 2025
Pagetamil
உலகம்

உலகளவில் அதிகரித்துள்ள உடல் பருமன் பிரச்சினை

உலகளவில் குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினரிடையே உடல் பருமன் விகிதம் கடந்த 1990 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவே பெரியவர்களிடையே உடல் பருமன் விகிதம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என ‘த லான்செட்’ வெளியிட்டுள்ள ஆய்வுத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல் பருமனால் உலக அளவில் சுமார் நூறு கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உடல் பருமன் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் சுமார் 190 நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுமார் 1,500 ஆய்வாளர்கள் இந்த பணியை மேற்கொண்டுள்ளனர். 5 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடையவர்களின் உயரம் மற்றும் உடல் எடை கணக்கிடப்பட்டுள்ளது. பிஎம்ஐ கணக்கீடு மூலம் 1990 முதல் 2022 வரையில் உடல் பருமன் விகிதத்தில் நிகழ்ந்துள்ள மாற்றம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டொனால்ட் ட்ரம்ப் நிபந்தனையின்றி விடுவிப்பு!

Pagetamil

நியூயோர்க்கில் பெரும் தீ – 7 பேர் காயம், உயிர்காக்கும் போராட்டத்தில் 200 வீரர்கள்

east tamil

போப் ஆண்டவர் உடல் நலக்குறைவு: உரையை வாசித்த உதவியாளர்

east tamil

ஜெட் ப்ளூ விமானத்தில் அதிர்ச்சி – இரு சடலங்கள் மீட்பு

east tamil

உலக அரசியலில் எலான் மஸ்க்கின் சர்ச்சை

east tamil

Leave a Comment