24.8 C
Jaffna
January 26, 2025
Pagetamil
குற்றம்

இளம் மனைவியின் தலையில் ஒரே போடு… பல மாதங்கள் நாடகமாடிய கணவன் கைது!

முச்சக்கரவண்டியில் இருந்து தவறி விழுந்ததாக குறிப்பிட்டு, தலையில் பலத்த காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பெண், ஒரு மாதத்தின் பின் உயிரிழந்திருந்தார். இந்த மரணம் கொலை என சந்தேகிக்கப்பட்டு அவரது கணவரை களுத்துறை குற்றப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

தனது மனைவியை மழுங்கிய ஆயுதத்தால் தலையில் தாக்கி பலத்த காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பதுரலிய, மரகஹதெனிய பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி இரவு, சந்தேக நபர் தனது மனைவி எம்.பி.கசுனி துலீகா என்ற 30 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய், முச்சக்கரவண்டியில் இருந்து தவறி விழுந்து காயமடைந்ததாக பதுரலிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

அவரது நிலைமை மோசமாக இருந்ததால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 2023 மே 7 ஆம் திகதி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் செய்த முறைப்பாடுகளின் அடிப்படையில் களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவினர் நீண்ட விசாரணையின் பின்னர் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உடுவில் பிரதேசத்தில் 330 லீற்றர் கோடாவுடன் ஒருவர் கைது!

Pagetamil

கணவனின் கொடூரம்: மனைவியை கொன்று, சமைத்து, எலும்புகளை உரலில் இடித்த அதிர்ச்சி சம்பவம்!

east tamil

யாழ்ப்பாண கோழி பிடித்த 3 பேர் கைது!

Pagetamil

சிறுமியுடன் இயற்கைக்கு மாறான விதத்தில் பாலியல் சேட்டை: காமக்கொடூரனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை!

Pagetamil

இலங்கையை உலுக்கிய கொள்ளைக்கும்பல் கைது: 36 வயது தலைவி… 22 வயது கணவன்!

Pagetamil

Leave a Comment