25.5 C
Jaffna
January 27, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

தலைவர் தெரிவையும் மீள நடத்துகிறோம்; சுமந்திரன் தரப்புக்கு ‘லொக்’: தமிழ் அரசு கட்சி நீதிமன்றத்துக்கு அறிவிப்பு!

திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், மனுதாரர்கள் கோரும் நிவாரணங்களை வழங்க தயாராக இருப்பதாக பிரதிவாதிகள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் எம்.ஏ.சுமந்திரனின் நிலைப்பாட்டை அறிவதற்காக ஏப்ரல் 5ஆம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 21,27ஆம் திகதிகளில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் நிர்வாக தெரிவுகளை இரத்து செய்யக்கோரி, திருகோணமலையை சேர்ந்த நபர் ஒருவர் திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், இடைக்கால கட்டாணை வழங்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று (29) விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இதன்போது, மாவை சேனாதிராசா, சி.சிறிதரன், ச.குகதாசன், சீ.யோகேஸ்வரன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகள் கே.வி.தவராசா, புவிதரன் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

இந்த வழக்கில் வழங்கப்பட்ட கட்டாணையை நீடிக்க வேண்டுமென வழக்காளி சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரட்ணம் கோரினார்.

இதற்கு பதிலளித்த பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணி கே.வி.தவராசா- இது சாதாரண எல்லை, காணி பங்கீட்டு வழக்கல்ல. ஒரு இனத்துடன் தொடர்புடைய, பாரம்பரிய கட்சியுடன் தொர்புடைய வழக்கு, இந்த வழக்கை தொடர்ந்து நீடிக்க- தொடர்ந்து நடத்த நாம் தயாரில்லை. இதனால் இனநலனில் அடிப்படையில் வழக்கை முடித்து, கட்சியை இயங்க செய்வதற்காக சில விட்டுக்கொடுப்புக்களை செய்யவும் தயாராக இருக்கிறோம். வழக்காளிகள் கோரும் நிவாரணங்களை நாம் வழங்க தயாராக இருக்கிறோம்.

தமிழ் அரசு கட்சியின் தலைவர் பதவிக்கான போட்டி நடந்ததாலேயே இந்த நிலைமை வந்தது. சிறிதரன் வெற்றி பெற்றிருக்காவிட்டால் இந்த வழக்கே வந்திருக்காது. ஆனால் சிறிதரன் பெரும்பான்மையான வாக்குகளால் வென்றார். அவர் அந்த வெற்றியையும் துறந்து, கட்சியை மீள இயங்க செய்ய விரும்புகிறார். அதனால் தலைவர் தெரிவையும் மீள நடத்த தயாராக இருக்கிறோம் என்றார்.

முன்னதாக, கட்சி மட்ட ஆலோசனையில், இந்த நிலைப்பாட்டிலேயே அனைவரும் இருப்பது என தீர்மானிக்கப்பட்டது. ஏனெில் ஆட்சேபணை தெரிவிக்க முற்பட்டால் வழக்கு நீண்டு செல்லும் என்பதால் அந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. அதற்கு சம்மதித்த பதில் செயலாளர் ப.சத்தியலிங்கம், குலநாயகம் ஆகியோர் இன்று மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்க முற்பட்டனர்.

அவர்கள் சார்பில் எழுந்த சட்டத்தரணியொருவர், அவர்கள் ஆட்சேபணை தாக்கல் செய்யவுள்ளனர், அதற்கு திகதி குறிப்பிடும்படி கேட்டனர்.

இதை சட்டத்தரணி கே.வி.தவராசா ஆட்சேபித்தார். அவர்கள் இருவரும் இந்த மன்றிலேயே இருப்பதால் அவர்களின் நிலைப்பாட்டை நேரில் கேட்க வேண்டுமென்றார். இதற்கு அவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ஆட்சேபணை தெரிவித்தார்.

எனினும், இது கட்சி சார்ந்த வழக்கு, அனைவரும் கட்சி பிரமுகர்கள், கட்சி தீர்மானமும் இதில் தொடர்புபட்டுள்ளது என கே.வி.தவராசா சுட்டிக்காட்டியதையடுத்து, அவர்களின் நிலைப்பாட்டை கேட்க நீதிமன்றம் சம்மதித்தது.

இருவரையும் அழைத்த நீதிமன்றம், அவர்களின் நிலைப்பாட்டை கேட்டது.

அவர்களும் தமக்கு ஆட்சேபணையில்லையென்றனர்.

இந்த வழக்கில் 7 பிரதிவாதிகள். அதிலொருவரான எம்.ஏ.சுமந்திரன் இன்று மன்றில் முன்னிலையாகவில்லை. (அவரது தாயாரின் இறுதி நிகழ்வுகள் நடந்து கொண்டிருப்பதால்). அவரது நிலைப்பாட்டை அறிய ஏப்ரல் 5ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அவரும், ஆட்சேபணையில்லையென குறிப்பிட்டால், வழக்கு சுமுகமாக முடியும். அவர் எடுக்கும் முடிவில், இந்த வழக்கின் பின்னணி என்னவென்பது வெளிப்படும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
2
+1
0

இதையும் படியுங்கள்

தமிழ் அரசு கட்சிக்காக தமிழ் கட்சிகளின் சந்திப்பு மீளவும் ஒத்திவைப்பு!

Pagetamil

யோஷித ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல்

Pagetamil

தமிழ் கட்சிகளிற்கிடையிலான சந்திப்பு 27ஆம் திகதிக்கு தள்ளிவைப்பு!

Pagetamil

தரம் 5 புலமைப்பரிசில் முடிவுகளும், வெட்டுப்புள்ளியும் வெளியீடு!

Pagetamil

அட்டகாசத்தில் ஈடுபட்ட அர்ச்சுனாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

Leave a Comment