நிகழ்நிலை காப்பு சட்டத்துக்கு எதிராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எ.சுமந்திரன் சமர்ப்பித்த அடிப்படை உரிமை மனுவை விசாரணை செய்யாமலேயே நிராகரிக்க உயர் நீதிமன்றம் இன்று (29) தீர்மானித்துள்ளது.
பிரியந்த ஜயவர்தன, ஷிரான் குணரத்ன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
உயர் நீதிமன்றத்தினால் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் இதில் இடம்பெறாத காரணத்தினால் சட்டப்பூர்வமாக சட்டமூலம் நிறைவேற்றப்படவில்லை என தீர்ப்பளிக்குமாறு கோரி எம்.ஏ.சுமந்திரன் இந்த மனுவை சமர்ப்பித்திருந்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1