அரசியலமைப்பை தொடர்ச்சியாக மீறும் சபையில் நாம் இருக்க வேண்டுமா என்பதை தீர்மானிக்க வேண்டிய தருணம் வந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பிங்கிரிய சரணகர மகா வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்ற கூட்டமொன்றின் போதே பிரேமதாச இந்த கருத்தை முன்வைத்தார்.
“சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பகிரங்கமாக அரசியலமைப்பை மீறுகின்றார். புதிய பொலிஸ் மா அதிபர் நியமனத்தை அங்கீகரிப்பதற்காக வாக்களித்ததன் மூலம் அரசியலமைப்பை மீறியுள்ளார். சபாநாயகர் அரசியல் சாசனத்தை புறந்தள்ளிவிட்டு தனது சொந்த வழியில் காரியங்களை செய்து வருகிறார்.vஎனவே, நாடாளுமன்றத்தில் நீடிக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டிய தருணம் வந்துவிட்டது,” என்றார்.
“உயர் அதிகாரிகள் பின்பற்றாதபோது தற்போதைய அரசியலமைப்பு ஏதேனும் பயன் உள்ளதா என்பதையும் ஒருவர் தீர்மானிக்க வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.