அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான உத்திக பிரேமரத்ன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
கடந்த ஆண்டு செப்டெம்பர் 2023 இல், அனுராதபுரம் விமான நிலைய வீதியில் உள்ள தனது தந்தையின் வீட்டிற்கு அருகில் பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன பயணித்த கார் மீது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமும் இடம்பெற்றது.
உத்திக பிரேமரத்ன 2020 பொதுத் தேர்தலில் அனுராதபுரம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.
விமல் வீரவன்ச தலைமையில் பாராளுமன்றத்தில் சுயேட்சையாக செயற்படும் குழுவில் தற்போது, உத்திக செயற்பட்டு வருகிறார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
+1