கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு புறப்படவிருந்த 7 விமானங்கள் இன்று (27) இரத்து செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமான தகவல் நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
இதில் 6 விமானங்கள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானவை.
அதன்படி, இன்று (27) அதிகாலை 01.10 மணிக்கு இந்தியாவின் பெங்களூருக்குப் புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் யுஎல்-173 விமானமும், தாய்லாந்தின் பாங்காக் நகருக்கு அன்றைய தினம் அதிகாலை 01.15 மணிக்குப் புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் யுஎல்-402 விமானமும். அன்றைய தினம் 01.45க்கு இந்தியாவின் சென்னைக்கு புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் UL-127 விமானமும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், இன்று (27ம் திகதி) மாலை 05.10 மணிக்கு, இந்தியாவின் மும்பைக்கு புறப்பட வேண்டிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-143, மாலை 06.30 மணிக்கு தம்மாம் நோக்கி புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் UL-263 விமானம் மற்றும் 6.50 க்கு அபுதாபிக்கு புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் UL-207 விமானம் ஆகியன இரத்து செய்யப்பட்டுள்ளன.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று (/27) அதிகாலை 02.25 மணிக்கு இந்தியாவின் சென்னைக்கு புறப்படவிருந்த ஸ்பைஸ் ஜெட் விமானம் SG-002 தனது விமானத்தையும் ரத்து செய்துள்ளதாக விமான தகவல் மையத்தின் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.