26.4 C
Jaffna
January 11, 2025
Pagetamil
இலங்கை

புது திருப்பம்: வீடு புகுந்து தாக்கி விட்டு வரும் போதே யாழ் பல்கலை மாணவன் விபத்தில் இறந்தார்… ஒரு தலை காதல் காரணமா?; அதிர வைக்கும் சிசிரிவி காட்சிகள்!

யாழ்ப்பாணம், நீர்வேலியில் நேற்று (21) விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவன், வீடொன்றில் தாக்குதல் நடத்தி, வாகனத்துக்கு தீவைத்து விட்டு திரும்பி வரும்போதே விபத்தில் சிக்கியது தெரிய வந்துள்ளது.

ஒரு தலைக்காதலால் ஏற்பட்ட பழிவாங்கும் உணர்வினாலேயே இந்த தாக்குதல் சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று அதிகாலை 5.30 மணியளவில் அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுப்பிட்டி பகுதியில் நாய் குறுக்காக ஓடியதால் மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்த முடியாமல் விபத்துக்குள்ளாகி பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்தார்.

யாழ் பல்கலைக்கழகத்தில் 1 ஆம் வருடத்தில் கலைப்பிரிவில் கல்வி கற்றுவரும் மானிப்பாய் வேம்படி பகுதியைச் சேர்ந்த ரமேஸ் சகீந்தன் (22) என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.

மாணவன் உயிரிழந்த விவகாரம் மர்மமாக இருந்த நிலையில், மானிப்பாயை சேர்ந்த மற்றொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், உயிரிழந்த பல்கலைக்கழக மாணவனுடன் கூடப் பயணித்து, விபத்தில் சிக்கியவர் என்பது தெரிய வந்தது.

மானிப்பாயிலுள்ள அவரது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டது.

உயிரிழந்த பல்கலைக்கழக மாணவன் மோட்டார் சைக்கிளை செலுத்தியதும், காயமடைந்த மற்றையவர் பின்னாலிருந்து சென்றதும் தெரிய வந்தது. விபத்தின் போது, அவர்களது மோட்டார் சைக்கிளில் கிரிக்கெட் மட்டை இருந்ததும் தெரிய வந்தது.

உயிரிழந்த மாணவன் அதிகாலை 2.58 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். அதிகாலை 4 மணியளவில்  உடுப்பிட்டியில் தாக்குதல் முயற்சி நடந்தது.

இது குறித்து பொலிசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியபோது, வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவில் உள்ள உடுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி, ஹைஏஸ் வாகனத்துக்கு தீ வைத்து விட்டு திரும்பி வரும் போதே பல்கலைக்கழக மாணவன் விபத்தில் சிக்கியது தெரிய வந்தது.

உயிரிழந்த பல்கலைக்கழக மாணவனும் நண்பனும் இணைந்து இந்த வன்முறை தாக்குதலில் ஈடுபட்டு விட்டு திரும்பி வரும் போது விபத்து நிகழ்ந்தது.

கொழும்பு- யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபடும் ஒருவரின் வீடு புகுந்து வீட்டு யன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்ததுடன், ஹைஏஸ் வாகனத்துக்கு பெற்றோல் ஊற்றி தீவைத்துள்ளனர். எனினும், வீட்டிலிருந்தவர்கள் எச்சரிக்கையடைந்ததும், அவர்கள் தப்பியோடி விட்டனர்.

அங்கிருந்து வேகமாக தப்பிச் செல்லும் போதே நீர்வேலி, சிறுப்பிட்டி பகுதியில் விபத்தில் சிக்கியுள்ளனர். மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற பல்கலைக்கழக மாணவன் படுகாயமடைந்தார். அவரது வயிற்றின் கீழ் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. பல்சர் மோட்டார் சைக்கிளின் எரிபொருள் தாங்கி பகுதி தாக்கியதால் அவருக்கு உயிராபத்தான காயங்கள் ஏற்பட்டுள்ளன.

விபத்தை தொடர்ந்து, நண்பர்களுக்கு அறிவித்து, சம்பவத்தை மறைக்க அந்த இடத்தை சுத்தம் செய்து, தடயங்களை மறைத்ததுடன், காயமடைந்தவரை முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்று, பின்னர் நோயாளர் காவு வண்டியில் ஏற்றியனுப்பியுள்ளனர்.

அத்துடன், விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றையவர், மோட்டார் சைக்கிளை தனது வீட்டுக்கு எடுத்து சென்று மறைத்து வைத்து விட்டு, சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

ஒரு தலைக்காதல் விவகாரத்தினால் இந்த வன்முறை தாக்குதல் நடத்ததாக கருதப்படுகிறது. தாக்குதலில் ஈடுபட்ட தரப்பிலுள்ள ஒருவர் யுவதியொருவரை ஒரு தலையாக காதலித்ததாகவும், அந்த யுவதியுடன் பேசும் இளைஞன் ஒருவரை பழிவாங்கவே தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
7
+1
1
+1
1
+1
6

இதையும் படியுங்கள்

போலி ஆவணங்களை தயாரித்த மூவர் கைது

east tamil

புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கை தூதர்கள் – பிரதமர் சந்திப்பு

east tamil

கலென்பிந்துனுவெவ புதிய திவுல்வெவ நீர்த்தேக்கத்தில் மீண்டும் நீர்க்கசிவு

east tamil

உணவு விஷமானதால் டிக்கோயாவில் 13 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

east tamil

கொழும்பு-பசறை பேருந்து விபத்து – 13 பேர் காயம்

east tamil

Leave a Comment