தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) பிரதித் தலைவரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளருமான ஆர்ஆர் என அழைக்கப்படும், வேலாயுதம் நல்லநாதர் (இராகவன்) இன்று காலமானார்.
காலமாகும் போது அவருக்கு வயது 62.
அண்மையில் திடீரென நோய்வாய்ப்பட்டு கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று மாலை காலமானார்.
அவரது இறுதிச்சடங்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மூத்த போராளிகளில் ஒருவரான ஆர்.ஆர், மாலைதீவு மீதான புளொட் அமைப்பின் தாக்குதலில் முன்னணி பாத்திரம் வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
2
+1
+1