மின்சார கட்டணத்தை முன்னர் குறிப்பிட்டதை விட அதிகளவிலான தொகையை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மின் கட்டணத்தை குறைப்பது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. அந்த முன்மொழிவுகள் அனைத்தையும் பரிசீலித்து, மின்சார சபையினால் தயாரிக்கப்பட்ட பிரேரணை நாளை அல்லது நாளை மறுதினம் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதற்கேற்ப விலையை மாற்றியமைக்க முடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை மின்சார பொது ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த ரஞ்சன் ஜயலால், நாடாளுமன்றத்தின் மின்சாரக் கட்டணம் செலுத்தப்படவில்லை என ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தமை பொய்யான அறிக்கை எனவும், பாராளுமன்றம் திட்டமிட்டபடி மின்கட்டணத்தை செலுத்தியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்த பொய்யான செய்தியின் ஊடாக முழு நாடாளுமன்றம் மற்றும் அதன் உறுப்பினர்கள் மீது பொதுமக்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்த அமைச்சர், அவரை பாராளுமன்ற சிறப்புரிமைகள் குழுவிற்கு அழைக்குமாறு சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார்.