25.6 C
Jaffna
January 11, 2025
Pagetamil
சினிமா

நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் திருமண புகைப்படங்கள்!

நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

கன்னடத்தில் வெளியான கில்லி திரைப்படம் மூலம் 2009ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங். தொடர்ந்து தெலுங்கில் சில படங்களில் நடித்த அவர், தமிழில் தடையற தாக்க மூலம் அறிமுகம் ஆனார். தொடர்ந்து என்னமோ ஏதோ, தீரன் அதிகாராம் ஒன்று, தேவ், என்ஜிகே, அயலான் ஆகிய படங்களில் நடித்திருந்தார். ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திலும் இவர் நடித்து இருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங், தயாரிப்பாளர் ஜாக்கி பாக்னானி என்பவரை காதலித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பே தங்களது திருமணம் பற்றி அறிவித்திருந்தார் ரகுல் ப்ரீத் சிங். இந்நிலையில் தற்போது கோவாவில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்த இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். கோவாவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களது திருமணத்தில் பாலிவுட் திரை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். முன்னதாக தங்களது திருமணத்தை வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று கோவாவில் மாற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது. ரகுல் ப்ரீத் சிங்கின் திருமண கொண்டாட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘த கோட்’ படத்தால் மன அழுத்தம்: நடிகை மீனாட்சி சவுத்ரி வருத்தம்

Pagetamil

நடிகை ஹனி ரோஸ் புகார் – கேரள தொழிலதிபர் கைது

Pagetamil

கார் பந்தய பயிற்சியின் போது விபத்தில் சிக்கிய அஜித்

Pagetamil

வாழ்க்கையை சீரழித்து விட்டார்: இயக்குனர் மீது நடிகை புகார்

Pagetamil

“நான் சினிமாவுக்குள் வந்ததே சிலருக்கு பிடிக்கவில்லை” – சிவகார்த்திகேயன்

Pagetamil

Leave a Comment