கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு நாளை (22) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இதன்போது, மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான காலக்கணிப்பு வெளியாகலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
கொக்குத்தொடுவாயில் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன், முல்லைத்தீவு சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவா உள்ளிட்ட குழுவினரின் மேற்பார்வையில் அகழ்வு பணிகள் நடந்தன.
இந்த மனித எலும்புக்கூடுகள் தொடர்பான காலக்கணிப்பை தொல்லியல் பேராசிரியர் ராஜ் செமதேவா முல்லைத்தீவு நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். அந்த விபரம் நாளை தெரிய வரும்.
முன்னதாக, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள், கொக்குத்தொடுவாய் இராணுவ முகாம் மீதான தாக்குதலில் உயிரிழந்த விடுதலைப் புலிகள் அமைப்பினருடையவை என தமிழ்பக்கம் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த சம்பவம் 1995 இல் நடந்தது.