பேராதனை, குருகம பிரதேசத்தில் மாமனாரை கொட்டனால் அடித்துக் கொன்ற மருமகனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இக்கொலை நேற்றிரவு (19) இடம்பெற்றுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
51 வயதான மாரிமுத்து தர்மசீலன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட நபரின் மூத்த மகளின் கணவரே இந்த குற்றத்தை செய்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சந்தேகநபரின் மருமகன் மனைவி மற்றும் பிள்ளைகளை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாக தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் நேற்று (19) இரவு தனது பிள்ளைகளை பார்ப்பதற்காக தனது மனைவியின் தந்தையின் வீட்டிற்கு வந்திருந்த நிலையில், சந்தேகநபர் தனது நண்பர்கள் சிலருடன் மதுபானம் அருந்தியிருந்தமை தெரியவந்துள்ளது.
அப்போது, மாமனாருடன் அவருக்கு தகராறு ஏற்பட்டது.இதையடுத்து, மருமகன், மாமனாரை கொட்டனால் தாக்கியுள்ளார்.
மருமகன் தாக்கியதில் இருந்து தப்பிக்க வீட்டை விட்டு வெளியே ஓடிய மாமனார் வீட்டின் அருகே கீழே விழுந்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து பிரதேச மக்கள் பொலிசாருக்குத் தகவல் கொடுத்தனர்.