25.6 C
Jaffna
January 11, 2025
Pagetamil
சினிமா

‘பேரன்பும் பெருங்கோபமும்’ முதல் தோற்றம் வெளியீடு

பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக நடிக்கும் படம், ‘பேரன்பும் பெருங்கோபமும்’. அவர் ஜோடியாக புதுமுகம் ஷாலி நிவேகாஸ் அறிமுகமாகிறார். மைம் கோபி, அருள்தாஸ், லோகு, சுபத்ரா, தீபா, சாய் வினோத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜே.பி.தினேஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். சிவபிரகாஷ் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ரியோட்டா மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது.

படம் பற்றி சிவபிரகாஷ் கூறும்போது, “நாயகனின் வாழ்வில் மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெறும் சம்பவங்களின் தொகுப்பாக இதன் கதை எழுதப்பட்டுள்ளது. சமூகத்தால் இழைக்கப்பட்ட தீமைகளை நாயகன் எப்படி எதிர்கொண்டான்? என்பதைச் சுவாரசியமான திருப்பங்களுடனும் இந்தப் படம் சொல்லும்” என்றார்.

படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் தலைப்பும், முதல் தோற்றமும் நேற்று வெளியிடப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘த கோட்’ படத்தால் மன அழுத்தம்: நடிகை மீனாட்சி சவுத்ரி வருத்தம்

Pagetamil

நடிகை ஹனி ரோஸ் புகார் – கேரள தொழிலதிபர் கைது

Pagetamil

கார் பந்தய பயிற்சியின் போது விபத்தில் சிக்கிய அஜித்

Pagetamil

வாழ்க்கையை சீரழித்து விட்டார்: இயக்குனர் மீது நடிகை புகார்

Pagetamil

“நான் சினிமாவுக்குள் வந்ததே சிலருக்கு பிடிக்கவில்லை” – சிவகார்த்திகேயன்

Pagetamil

Leave a Comment