பாடசாலையின் இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டு ஒத்திகையின் போது 73 பாடசாலை மாணவர்கள் குளவி கொட்டுக்குள் உள்ளாகி காயமடைந்து பசறை வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை (20) அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மாணவர்களில் 18 மாணவர்கள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஏனைய மாணவர்கள் சிகிச்சை பெற்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறி வீடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் பசறை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் பியரத்ன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
பசறை தேசிய பாடசாலையின் வருடாந்த இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டு நிகழ்வுக்கான ஏற்பாடுகள் இந்த நாட்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, பசறை உள்ளூராட்சி மன்ற விளையாட்டு மைதானத்தில் ஒத்திகை செவ்வாய்க்கிழமை (20) நடைபெற்றது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1