இலங்கை தமிழ் அரசு கட்சியின் தேசிய மாநாட்டு விவகாரம் சட்டச் சிக்கலை எதிர்கொண்டுள்ள நிலையில், அடுத்த கட்ட விவகாரங்கள் குறித்து ஆராய்வதற்காக கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் கிளிநொச்சியில் கூடவுள்ளனர்.
எதிர்வரும் 23ஆம் திகதி இந்த சந்திப்பு நடைபெறும்.
எம்.ஏ.சுமந்திரன் அணியை சேர்ந்தவர்களான- முல்லைத்தீவு முஸ்லிம் சுயேட்சைக்குழு உறுப்பினர் பீற்றர் இளஞ்செழியன், சாணக்கியன் எம்.பியின் நெருங்கிய நண்பரான பரா ஆகியோர் அண்மையில் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இதன்படி, தேசிய மாநாட்டுக்கு எதிராக யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றங்கள் இடைக்கால தடைவிதித்திருந்தன.
இந்த சூழலில், அடுத்த கட்ட நகர்வுகளை ஆராய்வதற்காக கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்கள் கிளிநொச்சியில் கூடவுள்ளனர்.
தமிழ் அரசு கட்சி உறுப்பினர்கள் சிலர் பதவிக்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதை வழக்குகள் நிரூபித்துள்ளன என தமிழ் அரசு கட்சியின் தலைமை உணர்வதால், மத்தியகுழு கூட்டத்துக்கும் ஏதேனும் இடையூறு ஏற்படுத்தப்படலாம் என்ற முனனெச்சரிக்கையில், 23ஆம் திகதி கூட்டத்தை மத்தியகுழு கூட்டமாக அறிவிக்கவில்லை. மத்தியகுழு உறுப்பினர்கள் கூடி கலந்துரையாடுதென்றே அறிவித்துள்ளது.