யாழ்ப்பாணம், அச்சுவேலியில் இராணுவ பேருந்தும், முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி காயமடைந்தார்.
இன்று (15) மாலை 5 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.
பலாலி பகுதியிலிருந்து அச்சுவேலி நோக்கி சென்ற முச்சக்கர வண்டியும், பலாலி நோக்கி பயணித்த இராணுவ பேருந்தும், சென்.திரேசா பாடசாலைக்கு முன்பாக மோதி விபத்துக்குள்ளாகின.
இதில் முச்சக்கர வண்டியை செலுத்தி சென்ற, புத்தூர் கலைமதி கிராமத்தை சேர்ந்த 25 வயதான இளைஞன் காயமடைந்து அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
விபத்து தொடர்பில் அச்சுவேலி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1