முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் வசிக்கும் 18 வயதான உயர்தர மாணவியான நிதர்சினி என்பவரே உயிரை மாய்த்துள்ளார்.
வீட்டில் பெற்றோர்கள் இல்லாத நிலையில் மாணவி தனது அறைக்குள் தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயன்றார்.
அயலவர்கள் இதை அவதானித்து அவரை மீட்டு புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டபோதும் அங்கு அவர் உயிரிழந்துள்ளதாக வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இவரது சடலம் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இந்த உயிரிழப்பு தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்
What’s your Reaction?
+1
+1
1
+1
1
+1
+1
+1
+1
1