U19 WC Final | இந்தியாவை வீழ்த்திய அவுஸ்திரேலியா; 14 வருடங்களுக்கு பிறகு நிறைவேறிய கனவு!

Date:

நடப்பு இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றுள்ளது அவுஸ்திரேலியா. இதன் மூலம் 14 ஆண்டுகளுக்கு பிறகு சம்பியன் பட்டம் வென்றுள்ளது அந்த அணி. கடைசியாக கடந்த 2010இல் இளையோர் உலகக் கோப்பை தொடரில் பட்டம் வென்றிருந்தது அந்த அணி.

தென்னாபிரிக்க நாட்டில் நடைபெற்று வரும் இந்த தொடரில் 16 அணிகள் பங்கேற்று விளையாடின. மொத்தம் 41 போட்டிகள். இந்திய அணி நடப்பு சம்பியன் என்ற அந்தஸ்துடன் களம் கண்டது. இந்த தொடரில் இந்திய அணி குரூப்-ஏ மற்றும் சூப்பர் சிக்ஸ் பிரிவில் குரூப் 1-லும் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில் தென்னாபிரிக்க அணியை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது.

குரூப்-சி மற்றும் சூப்பர் சிக்ஸ் பிரிவில் குரூப் 2-லும் விளையாடிய அவுஸ்திரேலிய அணி, அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இதில் ரொஸ் வென்ற அவுஸ்திரேலிய அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்தது. அவுஸ்திரேலிய அணிக்காக ஹாரி 42 ரன்கள், ஹக் வெய்ப்ஜென் 48 ரன்கள், ஹர்ஜாஸ் சிங் 55 ரன்கள், ஒலிவர் பீக் 46 ரன்கள் எடுத்திருந்தனர்.

254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்திய அணி விரட்டியது. 91 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஆதர்ஷ் சிங் 47 ரன்கள் மற்றும் முருகன் அபிஷேக் 42 ரன்கள் எடுத்து ஆறுதல் தந்தனர். 43.5 ஓவர்களில் 174 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்தியா.

அவுஸ்திரேலிய அணி சார்பில் மஹ்லி, ராஃப் மேக்மில்லன் ஆகியோர் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தனர். இதன் மூலம் அவுஸ்திரேலிய அணி 79 ரன்களில் வெற்றி பெற்றது.

spot_imgspot_img

More like this
Related

நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தம்!

நாடளாவிய ரீதியில் நாளை (30.11.2026) முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்கப் போராட்டங்களுக்கு மத்தியிலும், பொதுமக்களுக்கான...

முடிவுக்கு வரவுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் : அமைச்சர் அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை விரைவில் நிறைவு...

1983 கறுப்பு ஜூலை வன்முறைகள் தொடர்பில் விரிவான ஆய்வு – விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமனம்!

1983 ஜூலை மாதத்தில் இலங்கை முழுவதும் பரவிய கறுப்பு ஜூலை வன்முறைகள்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்