இந்தோனேசியாவில் இடம்பெற்ற கால்பந்து போட்டியின் போது மின்னல் தாக்கி வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் இன்று (12) செய்தி வெளியிட்டுள்ளன.
மேற்கு ஜாவாவின் பாண்டுங்கில் உள்ள சிலிவாங்கி மைதானத்தில் நேற்று (11) இடம்பெற்ற போட்டியில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
மின்னல் தாக்கியதில் 34 வயதான தடகள வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த எதிர்பாராத சம்பவத்தால் போட்டியில் விளையாடிய பல வீரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மின்னல் தாக்கியதில் வீரர் மூச்சுத்திணறிக் கொண்டிருந்ததாகவும், உடனடியாக உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் உயிரிழந்ததாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
This happened during a football match in Indonesia 🇮🇩 pic.twitter.com/JHdzafaUpV
— Githii (@githii) February 11, 2024
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1