பஸ்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்கும் புதிய நடவடிக்கையின் கீழ் பஸ்ஸில் யுவதியின் காலை உரசி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக கூறப்படும் நபர் ஒருவர் இன்று (7) கைது செய்யப்பட்டதாக மோதர பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பேலியகொடையில் உள்ள கூரியர் சேவை நிலையத்தில் பணிபுரிபவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்றை பஸ்களில் கடமையில் ஈடுபடுத்தி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1