25 C
Jaffna
January 12, 2025
Pagetamil
சினிமா

லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசன் போஸ்டரின் பின்னணி

நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசன் ஒருவரையொருவர் பார்த்தபடி நின்றிருக்கும் போஸ்டர் ஒன்றை வெளியிட்டது. இதற்கான பின்னணி காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது ‘ரஜினி171’ படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். ஸ்ருதிஹாசன் நடிப்பில் அண்மையில் ‘சலார்’ படம் திரையரங்குகளில் வெளியானது. இந்த இருவரும் இருக்கும் புகைப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டது இதற்கான கேப்ஷனில், “இனிமேல் டெலுலு என்பது புதிய சொல்லு” என பதிவிடப்பட்டிருந்தது. இது ரசிகர்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

பின்னணி: ஸ்ருதிஹாசனும், லோகேஷ் கனகராஜும் ஆல்பம் பாடல் ஒன்றுக்காக கைகோத்துள்ளனர். அதற்கான அறிவிப்புதான் இந்த போஸ்டர். மேலும், இந்தப் பாடலானது வரும் பெப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. பாடலை பாடி இசையமைத்திருக்கிறார் ஸ்ருதிஹாசன். இந்தப் பாடலை கேட்டபின்பு லோகேஷ் கனகராஜ் ஆல்பத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும், இதற்கான படப்பிடிப்பு சென்னையில் இன்று நடந்து முடிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘த கோட்’ படத்தால் மன அழுத்தம்: நடிகை மீனாட்சி சவுத்ரி வருத்தம்

Pagetamil

நடிகை ஹனி ரோஸ் புகார் – கேரள தொழிலதிபர் கைது

Pagetamil

கார் பந்தய பயிற்சியின் போது விபத்தில் சிக்கிய அஜித்

Pagetamil

வாழ்க்கையை சீரழித்து விட்டார்: இயக்குனர் மீது நடிகை புகார்

Pagetamil

“நான் சினிமாவுக்குள் வந்ததே சிலருக்கு பிடிக்கவில்லை” – சிவகார்த்திகேயன்

Pagetamil

Leave a Comment