நடிகை தமன்னாவுடன் புகைப்படம் எடுக்க ரூ.30,000 அறவிடவுள்ளதாக நடிகை ரம்பாவின் கணவரின் நிறுவனம் அறிவித்துள்ளது.
நடிகை தமன்னாவுடன், நகைச்சுவை நடிகர் யோகி பாபு உள்ளிட்டவர்களுடனும் புகைப்படம் எடுக்க முடியும்.
நடிகை ரம்பாவின் கணவரினால் யாழ்ப்பாணத்தில் தனியார் உயர்கல்வி நிறுவனமொன்று ஆரம்பிக்கப்படுகிறது. இதற்காக தென்னிந்திய சினிம கலைஞர்களை அழைத்து வந்து இசை நிகழ்ச்சியும் நடத்தவுள்ளார்.
பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்ச்சி யாழ் முற்றவெளியில் நடக்கிறது.
இந்த நிகழ்ச்சிக்காக நடிகை தமன்னா, நகைச்சுவை நடிகர் யோகி பாபு உள்ளிட்டவர்களும் வருகிறார்கள். அவர்களுடன் புகைப்படம் எடுப்பதெனில் ரூ.30,000 கட்டணம் செலுத்த வேண்டுமென ரம்பாவின் கணவர் நிறுவனம் அறிவித்துள்ளது.
கல்வி நிறுவனம் ஒன்றை ஆரம்பிப்பதெனில் தென்னிந்திய சினிமா கலைஞர்களை அழைத்து வந்துதான் பிரபலப்படுத்த வேண்டுமா என்ற கேள்வி எழுந்திருந்த நிலையில், நடிகையை அழைத்து வந்து, அவருடன் புகைப்படம