மிதக்கும் தங்கம் என அழைக்கப்படும் திமிங்கில வாந்தியை (அம்பர்) சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்ய தயாரான சந்தேகநபர்கள் மூவர் நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளனர்.
4 கிலோ 500 கிராம் அம்பர் மீட்கப்பட்டது. இலங்கையில் அம்பர் வைத்திருப்பதோ, விற்பனை செய்வதோ சட்டவிரோதமானது.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலுக்கு அமைய, தெவிநுவர மற்றும் நகுலகமுவ பிரதேசத்தில் வைத்து மிரிஸ்ஸ குற்றத்தடுப்பு பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொண்டேரோ ரக ஜீப் வண்டியில் பயணித்த போதே கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நகுலோகமுவ பிரதேசத்தை வசிப்பிடமாகவும், 25-30 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர்.
அழிவு அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள திமிங்கலத்தின் உடலில் இருந்து இயற்கையாக வெளியாகும் விந்து மற்றும் வாந்தியான இந்த ஆம்பரின் (Sperm Whale) தற்போதைய சந்தை மதிப்பு ரூ.3 கோடி ரூபாவாகும்.
வாசனைத் திரவியங்கள் மத்தியில் இவை அதிக கிராக்கி உள்ளதாகவும், வாசனைத் திரவியங்களின் நறுமணத்தை நீண்ட காலம் பராமரிக்கப் பயன்படுவதாகவும் கூறப்படுகிறது.