சிகை அலங்கார கடைக்கு நடந்து சென்றுக்கொண்டிருந்த போது, மரக்கிளை முறிந்து விழுந்ததில் அதில் சிக்குண்ட மாணவன், பரிதாபமாக மரணமடைந்த சம்பவமொன்று நோர்வூட் பொலிஸ் பிரிவில் சனிக்கிழமை (03) மதியம் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
நோர்வூட் தமிழ் வித்தியாலயத்தில் தரம் ஒன்பதில் கல்வி பயின்று வரும் நியூட்டன் தோட்டத்தைச் சேர்ந்த முருகன் அஷால் (14) என்ற மாணவனே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
சம்பவத்தை அடுத்து அவர், டிக்கோயா- கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இவ்வாறு கொண்டு செல்லப்படும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார். இதனையடுது்து அம்மாணவனின் சடலம் நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டு, பிரேத பரிசோதனையின் பின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1