கிளிநொச்சி, விசுவமடு பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த காரொன்று, வர்த்தக நிலையத்துக்குள் புகுந்துள்ளது.
வர்த்தக நிலையத்தன் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்க வண்டி, மோட்டார் சைக்கிள், துவிச்சக்கர வண்டியென்பன சேதமடைந்தன.
பரந்தன்- புதுக்குடியிருப்பு வீதியில் விசுவமடு பகுதியில் இன்று (5) மாலை 5.40 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.
புதுக்குடியிருப்பிலிருந்து பரந்தன் நோக்கி பயணித்த கார், மோட்டார் சைக்கிள் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது, வேகக்கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரமிருந்த வர்த்தக நிலையத்துக்குள் புகுந்தது.
வர்த்தக நிலையத்துக்கு வந்த வாடிக்கையாளர்களின் வாகனங்கள், வர்த்தக நிலையத்தின் முன்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றை மோதித்தள்ளியபடி கார் வர்த்தக நிலையத்துக்குள் புகுந்தது.
இரண்டு மோட்டார் சைக்கிள்கள், ஒரு துவிச்சக்கரவண்டி மற்றும் முச்சக்கரவண்டி என்பன சேதமடைந்தன.
காரின் கீழ்ப்பகுதியில் இருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்கள், துவிச்சக்கர வண்டி என்பன மீட்டுள்ளன.
விபத்து தொடர்பாக தர்மபுரம் போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.