இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, இந்திய அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை இன்று (5) சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பு சர்தார் படேல் பவனில் நடைபெற்றது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பிராந்திய பாதுகாப்பு மற்றும் இருதரப்பு உறவுகள் தொடர்பில் இந்த சந்திப்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இந்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தும் கலந்து கொண்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1