மட்டக்களப்பு நகரில் கரிநாள் போராட்டத்தில் பங்கேற்க பெருமளவு பொதுமக்கள் திரண்டு வரும் நிலையில், அங்கு பெருமளவு பொலிசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை சுதந்திரதினத்தை கரிநாளாக தமிழ் மக்கள் பிரகடனப்படுத்தியுள்ள நிலையில், இன்று மட்டக்களப்பு நகரில் போராட்டம் திட்டமிடப்பட்டிருந்தது. இந்த போராட்டங்களில் பங்கேற்க 17 பேரின் பெயர் குறிப்பிட்டு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில் மட்டக்களப்பு நகரில் சென் செபஸ்ரியன் தேவாலயத்தில், கரிநாள் போராட்டத்துக்காக தமிழ் மக்கள் திரண்டு வருகிறார்கள்.
பொதுமக்கள் மேலும் நகர முடியாமல் பெருமளவு பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், இந்த போராட்டத்தில் பங்கேற்க திருகோணமலையில் இருந்து பேருந்துகளில் வந்தவர்கள் வெருகல் பகுதியில் பொலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1