26.9 C
Jaffna
January 27, 2025
Pagetamil
இலங்கை

கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை

கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் ஐவரும் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் ஐந்து பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.

இலங்கையின் 76ஆவது சுதந்திரதினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் வீதித்தடைகளை தாண்ட பல்கலைக்கழக மாணவர்கள் முற்பட்ட நிலையில் குழப்பமான நிலை ஏற்பட்டதையடுத்து பொலிஸாரால் போராட்டகாரர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம், கண்ணீர் புகைப் பிரயோகம் நடத்தப்பட்டது.

இதனையடுத்து பல்கலைக்கழக மாணவர்கள் சிலரை பொலிஸார் தூக்கிச் சென்று வாகனங்களில் ஏற்றினர்.

மிதுசன், கவிதரன், எழில் ராஜ், அபிஷேக், நிவாசன் ஆகிய ஐந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

குறித்த மாணவர்களை விடுதலை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்து போராட்டகாரர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டநிலையில், சில மணி நேரங்களின் பின்னர் ஜவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மீனவ பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சி – ரவிகரன்

east tamil

மஹிந்தவின் உடல் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் – கோரிக்கை

east tamil

பெப்ரவரி 4 கரிநாளாக பிரகடனப்படுத்த அழைப்பு!

Pagetamil

மஹிந்தவுக்கும் வீட்டுத்திட்டத்தில் வீடு வழங்கப்படலாம்!

Pagetamil

யோஷித ராஜபக்ஷ இன்று மீண்டும் நீதிமன்றத்தில்

Pagetamil

Leave a Comment