27 C
Jaffna
January 11, 2025
Pagetamil
இலங்கை

வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக வடக்கு மாகாண அரச சாரதிகள் சங்கம் அறிவிப்பு!

வடக்கு மாகாண அரச சாரதிகளுக்கு உரிய முறையில் இடமாற்றம் வழங்கப்பட வேண்டும். இல்லையேல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக சாரதிகள் சங்கத்தின் செயலாளர் சுதர்ஷன் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது-

வடமாகாணத்தின் ஆளுநர் பி.எஸ் .எம் சாள்ஸ் கடந்த காலத்தில் ஆளுநராக இருக்கும் பொழுது இடமாற்றம் இடம்பெறவேண்டும் என ஆர்வமாக இருந்த பொழுதிலும் தற்பொழுது ஆளுநராலேயே இது இடைநிறுத்தப்ட்டுள்ளது. தற்பொழுது அனைவரும் கூடி தொழிற்சங்க நடவடிக்கைக்கு செல்ல தீர்மானத்துள்ளோம்.

கடந்த தைமாதமே தொழிற்சங்க நடவடிக்கைக்கு செல்ல முற்பட்ட பொழுது உயர்தர பரீட்சையினை கருத்திற்கொண்டு தை மாதம் நாம் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை .

கடந்த மாதமே நாம் பெப்ரவரி 5 ஆம் திகதி முதல் 10 திகதி வரை தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்தோம். இருப்பினும் கடந்த மாதமே வடமாகாணத்திற்குட்பட்ட திணைக்களங்கள் ,அமைச்சுக்களுக்கு நாம் கடிதம் அனுப்பியும் தீர்மானம் எடுக்கப்படவில்லை .

ஆளுநரிடம் சென்ற பொழுது அவர் எம்மை சந்திக்கவில்லை ஆளுநரின் செயலாளர் பிரதம செயலாளரை சந்திக்க சொன்னார். பிரதம செயலாளரை சென்று சந்தித்து பொழுது எமக்கு நோயாளர் காவு வண்டி ஓடுவதற்கு தெரியவில்லை என தெரிவித்தார்.

இருந்தாலும் நாம் அனைவரும் 10 வருடமாக சேவையில் உள்ளோம். உடனடியாக எமக்கான பயிற்ச்சியினை இருமாத காலத்திற்கு வழங்கி உத்தரவாத கடித்ததுடன் எம்மை இடமாற்ற வேண்டும் என கோரியிருந்தோம். அதற்கு இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை.

மேலும் கடந்த 2018 ஆம் ஆண்டில் இருந்து இடமாற்றம் இடைநிறுத்தபட்டுகின்றது
மத்திய அமைச்சர்களால் இது இடைநிறுத்தபடுகின்றது.

மத்திய சுகாதார அமைச்சு எடுக்கின்ற தீர்மானம் தொடர்பில் மாகாண சுகாதார அமைச்சின் கீழ் இருக்கின்ற சாரதிகளுக்கோ அல்லது தொழிற்சங்கத்திற்கோ எதுவித அறிவிப்புக்களும் வழங்கபடவில்லை.

ஆகவே எமது இடமாற்றத்தை வலியுறுத்தி எதிர்வரும் பெப்ரவரி 5 ஆம் திகதி காலை ஆளுநர் செயலகத்திற்கு பேரணியாக சென்று மகஜரை கையளித்து தொடர்ந்து பிரதம செயலாளருக்கும் மகஜரை கையளிக்க உள்ளோம்.

மாறாக எமக்கான நோயாளர் காவு வண்டி சாரதி பயிற்சி உத்தரவாத காலத்துடன் இடமாற்றம் கடிதமும் வழங்கபடுமாயின் நாம் தொழிற்சங்க நடவடிக்கைகளில் இருந்து விலகுவோம் எனவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் வடமாகாண அரச சாரதிகள் சங்கம் பின்வருமாறு அறிக்கை ஒன்றினையும் வெளியீடு செய்துள்ளனர். அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது..

வடக்கு மாகாண சபையின் இணைந்த சேவை உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த இடமாற்றம் – 2024 மேற்படி விடயம் தொடர்பாக, கடந்த ஐந்து வருடங்களாக தடைப்பட்டிருந்த சாரதிகளின் இடமாற்றமானது கடந்த வருடம் பிரதிப்பிரதம செயலாளர்
நிர்வாகம் அவர்களினால் விண்ணப்பம் கோரப்பட்டு இடமாற்ற பட்டியலும்
வெளியிடப்பட்டிருந்தது.

இருந்த போதிலும் ஆளுநர் அவர்களின் கோரிக்கைக்கு இணங்க இடமாற்றம் நிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தினை சுட்டிக்காட்டி 04.01.2024 தொடக்கம் 10.01.2024 வரையான ஏழு நாட்களும் 17.01.2024 தொடக்கம் 30.01.2024 வரையான 14 நாட்களும் கால அவகாசம்
வழங்கி எமது இடமாற்றத்தினை நடைமுறைப்படுத்துமாறு பிரதிப்பிரதம
செயலாளர் நிர்வாகம் அவர்களினை கடிதம் மூலம் கேட்டிருந்தோம். குறித்த
காலப்பகுதிக்குள் இடமாற்றம் நடைமுறைக்கு வராதவிடத்து 05.02.2024
தொடக்கம் 10.02.2024 வரை தொடர் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.

நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி மற்றும் கௌரவ பிரதமர் அவர்கள் அரச சேவையில் 05 வருடங்களுக்கு ஒருமுறை அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் இடமாற்றம் வழங்குவதன் ஊடாக நாட்டில் இலஞ்சம் ஊழல் அற்ற வினைத்திறனான நிர்வாகத்தினை கட்டமைக்க முடியுமென்று உறுதிபடக் கூறியுள்ள போதிலும் சில பொறுப்பற்ற அதிகாரிகளின் செயற்பாடுகள் காரணமாக இடமாற்றம் நிறுத்தப்படுவது கவலையளிக்கின்றது.

எனவே எமது இடமாற்ற உரிமையினையும் தாபன விதிக்கோவையினையும் நடைமுறைபடுத்த வலியுறுத்தியே இத்தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளோம் குறித்த போராட்டமானது எதிர்வரும் திங்கட்கிழமை காலை 8 மணியளவில் கௌரவ
ஆளுனர் செயலகத்திற்கு அருகாமையில் ஆரம்பிக்கப்பட்டு பேரணியாக சென்று
மகஜர் கையளிப்பதுடன் தொடர்ந்து பிரதம செயலாளர் அலுவலகத்திற்கு
பேரணியாக சென்று மகஜர் கையளிப்பு இடம்பெறும். அத்தோடு 10.02.2024 வரை
தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டம் இடம்பெறும் என்பதனை
அறியத்தருவதோடு அனைவரினதும் ஆதரவினை வேண்டி நிற்கின்றோம் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

போலி ஆவணங்களை தயாரித்த மூவர் கைது

east tamil

புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கை தூதர்கள் – பிரதமர் சந்திப்பு

east tamil

கலென்பிந்துனுவெவ புதிய திவுல்வெவ நீர்த்தேக்கத்தில் மீண்டும் நீர்க்கசிவு

east tamil

உணவு விஷமானதால் டிக்கோயாவில் 13 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

east tamil

கொழும்பு-பசறை பேருந்து விபத்து – 13 பேர் காயம்

east tamil

Leave a Comment