யாழ்ப்பாணம், சுன்னாகத்தில் குடும்பஸ்தர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார்.
கந்தரோடை பகுதியில் நேற்று (30) மாலை இந்த சம்பவம் நடந்தது.
அயல்வீட்டுக்காரர்களான மைத்துனர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்துள்ளது.
சந்திரநாதர் கோபிராஜ் (37) என்பவரே உயிரிழந்தார்.
சம்பவத்தின் போது, தாக்கியவரும், உயிரிழந்தவரும் மதுபோதையில் இருந்தனர்.
இரு வீட்டாருக்குமிடையில் சில காலமாக இருந்த தகராறு முற்றி கொலையில் முடிந்துள்ளது. நேற்று, வேலி கடந்து கோழி அயல்வீட்டுக்குள் செல்வது தொடர்பில் இருவருக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதுவே முற்றி கொலையில் முடிந்தது.
கோபிராஜ் தன்னை கொட்டனால் தாக்க முற்பட்ட போது, அவரை கத்தியால் குத்தியதாக கைதான சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தை யாரும் நேரில் காணவில்லையென இரு குடும்பத்தினரும் பொலிசாரிடம் தெரிவித்து விட்டனர்.
57 வயதான சந்தேகநபர் சுன்னாகம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் இலங்கை போக்குவரத்துசபையின் மன்னார் சாலையில் நடத்துனராக பணிபுரிபவர்.